திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 8 செப்டம்பர் 2022 (09:43 IST)

“அவர் மட்டும் உயிரோட இருந்திருந்தா போய் கால்ல விழுந்திருப்பேன்…” ரஜினி ஓபன் டாக்!

நடிகர் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் விழா மேடையில் அந்த நாவலைப் பற்றி பேசியது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

சில தினங்களுக்கு  முன்னர் பொன்னியின் செல்வன் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. அந்த விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “நான் பொதுவாக புத்தகத்தின் அளவைப் பார்த்துதான் படிப்பேன். பொன்னியின் செல்வன் 2000 பக்கத்துக்கு மேல் என்றதும் படிக்கவே இல்லை. ஆனால் ஒரு முறை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் வந்தியத் தேவன் கதாபாத்திரத்துக்கு யாரை நடிக்கவைக்கலாம் எனக் கேட்ட போது அவர் என் பெயரைக் கூறினார். அப்போதுதான் நான் ஆர்வமாகி அந்த நாவலைப் படித்தேன்” எனக் கூறினார்.

மேலும் பொன்னியின் செல்வன் நாவல் பற்றி பேசும் போது “படிக்க ஆரம்பித்ததும் நாவலின் ஒவ்வொரு கதாபாத்திரமும் என்னை ஆக்கிரமித்துக் கொண்டன. அந்த நாவலை முடித்ததும், அதை எழுதிய கல்கி அவர்கள் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அவர் வீட்டுக்கே சென்று சாஷ்டாங்கமாக அவர் காலில் விழுந்திருப்பேன்” எனப் பேசியது படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகமாக்கியுள்ளது.