பொன்னியின் செல்வன் மேடையில் ரஹ்மானின் பாடலைப் பாடிய யுவன் & சந்தோஷ் நாராயணன்!
மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.
இதையடுத்து நேற்று ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் பல தமிழ் சினிமா பிரமுகர்கள் கலந்துகொண்டனர். விழா மேடையில் ரஹ்மான் – மணிரத்னம் கூட்டணியில் உருவான பாடல்கள் இசைக்கப்பட்டன. விழாவுக்கு வருகை தந்திருந்த இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் ரஹ்மானின் “அரபிக் கடலோரம்” பாடலை இணைந்து பாடி ரசிகர்களின் கரகோஷங்களைப் பெற்றனர்.