திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 13 ஜூலை 2023 (07:33 IST)

லால் சலாம் ஷூட்டிங்… ரஜினி காட்சிகளை முடித்த படக்குழு!

ரஜினிகாந்த் லைகா நிறுவனத்துக்கு லால் சலாம் மற்றும் ஞானவேல் இயக்கும் புதுபடம் என இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவர் சம்மந்தமான சில காட்சிகள் மும்பையில் சில வாரங்களுக்கு முன்னர் படமாக்கப்பட்டது.

இதையடுத்து திருவண்ணாமலையில் சில நாட்களுக்கு முன்னர் அடுத்த கட்ட ஷூட்டிங் தொடங்கியது. இதில் ரஜினிகாந்த் சில நாட்கள் கலந்துகொண்டார். இந்நிலையில் இப்போது ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டதாக லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதையடுத்து ரஜினிகாந்த் ஜெயிலர் மற்றும் லால் சலாம் ஆகிய இருபடங்களின் ஷூட்டிங்கையும் முடித்துவிட்டு அடுத்து த செ ஞானவேல் இயக்கும் படத்தில் கவனம் செலுத்த உள்ளார்.

லால் சலாம் படத்தினை ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்த படம் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.