வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வெள்ளி, 23 ஜூன் 2023 (19:51 IST)

திடீரென சம்பளத்தை குறைத்து கொண்ட ரஜினி... என்ன கரணம் தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தோடு கோலிவுட் சினிமாவில் நட்சத்திர நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் தற்போது ஜெயிலர் மற்றும் லால்சலாம் படத்தில் நடித்து வருகிறார். 
 
ஜெயிலர் படத்தின் வெற்றிக்காக ரஜினி மிகுந்த எதிர்பார்ப்பில் காத்துக்கொண்டிருக்கிறார்.  இதையடுத்து ரஜினிகாந்தின் 170 வது படத்தை இயக்குனர் TJ ஞானவேல் இயக்குகிறார். இந்த படத்தையும் லால் சலாம் திரைப்படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.
 
இந்நிலையில் திடீரென ரஜினி தனது சம்பளத்தை குறைத்துக்கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த இரண்டு படங்களுக்குமே ரூபாய் 105 கோடி சம்பளமாக வாங்குகிறாராம். இதற்கு முன்னர் அண்ணாத்த படத்திற்கு ரஜினி 110 கோடி சம்பளம் வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திடீரென ஏன் சம்பளத்தை குறைத்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது.