1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 9 ஜூலை 2021 (07:40 IST)

சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்: ரசிகர்கள் மகிழ்ச்சி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது குடும்பத்தினருடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு சென்று இருந்தார் என்பதும் அங்கு அவர் உடல் பரிசோதனை செய்து விட்டு சில நாட்களுக்கு பின்னர் சென்னை திரும்புவார் என்றும் கூறப்பட்டது 
 
அதன்படி சமீபத்தில் அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த் உடல் பரிசோதனை பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று அதிகாலை சென்னை திரும்பினார். இன்று அதிகாலை 2 மணிக்கு அவர் சென்னை திரும்பியதாகவும் அவர் சென்னை விமான நிலையத்திலிருந்து காரில் ஏறும் காட்சிகளில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ரஜினிகாந்த் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்றும் ரஜினி தரப்பினர் கூறியுள்ளனர். ரஜினிகாந்த் முழு உடல் நலத்துடன் மீண்டும் சென்னை திரும்பி உள்ளது ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது