திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (17:35 IST)

’டான்’ சிபிக்கு அடித்த அதிர்ஷ்டம்: ‘தலைவர் 170’ படத்தை இயக்குவதாக தகவல்!

rajini cibi
டான்’ சிபிக்கு அடித்த அதிர்ஷ்டம்: ‘தலைவர் 170’ படத்தை இயக்குவதாக தகவல்!
சிவகார்த்திகேயன் நடித்த டான் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் சிபிசக்கரவர்த்தி அடுத்ததாக ரஜினியின் படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து அவர் நடிக்கயிருக்கும் 170 ஆவது படத்தை சிபிச்சக்கரவர்த்தி இயக்க இருப்பதாகவும் லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அனிருத் இசை இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
சிபிச்சக்கரவர்த்தி இயக்கிய ’டான்’ படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரித்த நிலையில் அந்த படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஆனதை அடுத்து ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை லைகா நிறுவனம் சிபிக்கு கொடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது