திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 4 ஜனவரி 2019 (13:21 IST)

4 டன் குட்கா எரிப்பு – காஞ்சிபுரத்தில் அதிரடி நடவடிக்கை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட குட்கா உள்ளிட்ட 4 டன் எடையுள்ள போதைப்பெருட்களை போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் தீயிலிட்டு எரித்தனர்.

தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்ட குட்கா மற்றும் பான் பொருட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்வதாக எழுந்த புகாரில் சுகாதாரத்துறை அமைச்சர் முதல் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் பெயர்கள் வரை சிக்கிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனாலும் தமிழகத்தில் ஆங்காங்கே சடட் விரோதமாக இன்னமும் குட்கா விற்பனை நடந்துகொண்டுதான் உள்ளது என்றும் செய்திகள் பரவி வருகின்றன. இதை உறுதிப்படுத்துவது போல காஞ்சிபுரம், வேலூர், நாமக்கல் மற்றும் தேனி ஆகியப் பகுதிகளில் போலிஸார் குட்கா மற்றும் போதைப் பொருட்களைக் கைப்பற்றிய சம்பவம் ஆங்காங்கே நடந்து வருகிறது.

இதற்கிடையில் இதுவரைக் கைப்பற்றியுள்ள குட்கா, கஞ்சா மற்றும் இன்னபிறப் போதைப் பொருட்களை இன்று அதிகாரிகள் எரித்துள்ளனர். சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் தென்மேல்பாக்கம் பகுதியில் 4 டன் எடை கொண்ட 8 கோடி ரூபாப் மதிப்பிலான குட்கா பொருட்களை சென்னை போதை பொருள் நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பி புருஷோத்தம்மன் தலைமையில் மற்ற அதிகாரிகள் முன்னிலையில் எரித்துள்ளனர்.