வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 8 ஆகஸ்ட் 2018 (06:20 IST)

ராஜாஜி ஹாலுக்கு ரஜினிகாந்த் வருகை: கருணாநிதிக்கு இறுதியஞ்சலி

திமுக தலைவர் கருணாநிதிக்கு இறுதியஞ்சலி செலுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்றுமுன் அவருடைய உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி ஹாலுக்கு வருகை தந்தார்.
 
ரஜினியுடன் அவருடைய மனைவி லதா, மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ் ஆகியோர்களும் உடனிருந்தனர்.
 
திமுக தலைவர் கருணாநிதிக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த், பின்னர் மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி ஆகியோர்களுக்கு ஆறுதல் கூறினார்.