கருணாநிதி உடலில் தேசிய கொடி

Last Modified புதன், 8 ஆகஸ்ட் 2018 (06:07 IST)
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்ததை அடுத்து திமுகவினர்களின் வேண்டுகோளை ஏற்று அவருக்கு முழு அரசு மரியாதை தரப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.
அந்த வகையில் சற்றுமுன் கருணாநிதியின் உடல் மீது இந்திய தேசிய கொடி போர்த்தப்பட்டது. அரசு சார்பில் மரியாதை செலுத்தும் வகையில் அவருக்கு தேசிய கொடி போர்த்தியபோது திமுக தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு 'கலைஞர் வாழ்க' என்று கோஷமிட்டனர்.

மேலும் கருணாநிதியின் மறைவினை ஒட்டி தலைமை செயலகத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கருணாநிதியின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :