திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 4 செப்டம்பர் 2024 (15:12 IST)

ரஜினியின் ’கூலி’ படத்தின் தேவா கேரக்டர் போஸ்டர்.. 1421 எண்ணிற்கு என்ன அர்த்தம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தின் நடிக்கும் நட்சத்திரங்களின் கேரக்டர் போஸ்டர்கள் கடந்த சில நாட்களாக வெளியான நிலையில் கடைசியாக ரஜினிகாந்த் இந்த படத்தில் தேவா என்ற கேரக்டரில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதுமட்டுமின்றி இந்த போஸ்டரில் 1421 என்ற எண் இருந்த நிலையில் இந்த எண்ணுக்கு என்ன அர்த்தம் என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது இது குறித்த தகவல் வெளியாகி உள்ளன.

கூலி திரைப்படம் தங்க கடத்தலை மையமாக கொண்டு உருவாக்கி இருப்பதால் 1421 என்பது தங்க கேரட்டுகளை குறிப்பிடுவதாக ஒரு சிலர் கூறுகின்றனர். 14 கேரட் இந்தியா அமெரிக்கா கனடா நாடுகளுக்கு உரியவையாக பார்க்கப்படுகிறது. 21 கேரட் என்பது அரபு நாடுகளில் அதிகம் பயன்படுத்தும் வகையில் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே 14 கேரட் மற்றும் 21 கேரட் தங்கத்தை தான் இந்த 1421 கூறியதாக கூறப்படுகிறது. மேலும் போஸ்டருக்கு பின்னால் இரு தங்கக் கட்டிகள் இருப்பதை அடுத்து 1421 என்பது கேரட்டை தான் குறிப்பிடுவதாக ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மொத்தத்தில் கூலி படத்தின் கேரக்டர் போஸ்டர்கள் பல்வேறு யூகத்தை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து இந்த படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran