திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 19 செப்டம்பர் 2024 (07:46 IST)

ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தின் வீடியோக் காட்சிகல் இணையத்தில் லீக்… லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் சில மாதங்களாக ஐதராபாத்தில் நடந்து வருகிறது.  லோகேஷ் கன்கராஜ் இயக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  மேலும் அமீர்கான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆந்திரா மழையால் பாதிக்கப்பட்டிருந்த ஷூட்டிங் தற்போது மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தின் சில ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக் காட்சிகள் இணையத்தில் கசியவிடப்பட்டன. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலைய்ல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார். அதில் “ஒரு வீடியோவால் பலரின் இரண்டு மாத உழைப்பு வீணாகிறது. இதுபோன்ற திரையனுபவத்தைக் கெடுக்கும் செயல்களில் யாரும் ஈடுபடவேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.