ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 22 ஜூன் 2022 (16:01 IST)

சார்லி 777 படத்தை பார்த்து பாராட்டிய சூப்பர் ஸ்டார்… ரக்‌ஷித் ஷெட்டி பகிர்ந்த பதிவு

சமீபத்தில் ரிலீஸான சார்லி 777 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பைப் பெற்று வருகின்றன.

கன்னடத்தில் கிரண்ராஜ் இயக்கத்தில் ரக்‌ஷித் ஷெட்டி நடித்து உருவான படம் “777 சார்லி”. ஒரு வளர்ப்பு நாயை மையமாக கொண்ட இந்த படம் கடந்த ஜூன் 10ம் தேதி வெளியான நிலையில் விமர்சன அளவிலும், வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர்.

இந்த படத்தை சமீபத்தில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பார்த்துள்ளார். இந்த படத்தை பார்த்ததும் கடந்த ஆண்டு தான் ஆசையாக வளர்த்த நாய் இறந்து போனதை நினைத்து கதறி அழுதுள்ளார் பசவராஜ் பொம்மை. முதல்வர் கதறி அழுத சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதையடுத்து இப்போது ரஜினிகாந்த் இந்த படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளதாக ரக்‌ஷித் ஷெட்டி பதிவு செய்துள்ளார். அதில் “இந்த நாளின் சிறப்பான தொடக்கம்.  ரஜினி சாரிடம் இருந்து அழைப்பு வந்தது. அவர் நேற்றிரவு சார்லி படத்தைப் பார்த்துள்ளார். படத்தின் தரம் மற்றும் உருவாக்கம் பற்றி பாரட்டிப் பேசினார். க்ளைமேக்ஸ் பற்றி மிகவும் சிலாகித்து பேசினார்” எனப் பதிவு செய்துள்ளார்.