1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 7 நவம்பர் 2023 (11:03 IST)

விரைவில் தலைவர் 170 படத்தின் டைட்டில் டீசர் வீடியோ!

ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது. இன்று முதல் ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலியில் நடக்க, இரண்டாம் கட்ட ஷூட்டிங் மும்பையில் படமாக்கப்பட்டது. அங்கே அமிதாப் பச்சன் நடிக்கும் காட்சிகளை படமாக்கியுள்ளது படக்குழு.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் டீசர் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 12 ஆம் தேதி இந்த டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.