செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 4 நவம்பர் 2023 (17:28 IST)

80s-ல் நடந்த கமல்-ரஜினி ரசிகர்கள் சண்டை.. சந்தானத்தின் ‘பில்டப்’ டீசர்..!

கடந்த எண்பதுகளில் கமல் மற்றும் ரஜினி ரசிகர்கள்  போட்ட சண்டையின் அடிப்படையில் உருவான திரைக்கதை அம்சம் கொண்ட படம் தான் சந்தானம் நடித்துள்ள பில்டப்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டீசரில் சந்தானம், கமல் ரசிகராக கலகலப்பாக நடித்திருக்கிறார் என்பதும் கமல் படம் வெளியாகும் தினத்தில் திடீரென அவருடைய தாத்தா இறந்த விட அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

சுந்தர்ராஜன், மன்சூர் அலிகான், கே எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்க்ஸி என ஒரு காமெடி கூட்டமே இந்த படத்தில் இருப்பதால் காமெடிக்கு பஞ்சமில்லை.  சந்தானம் ஜோடியாக ராதிகா ப்ரீத்தா இந்த படத்தில் நடித்துள்ளார்.

ஒரு பக்கம் ரசிகர்கள் சண்டை, இன்னொரு பக்கம் தாத்தாவின் மரணம், இன்னொரு பக்கம்  ராதிகா ப்ரீத்தா உடன் காதல் என கலகலப்பாக இந்த படத்தை இயக்குனர் கல்யாண் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே குலேபகாவலி உள்பட ஒரு சில படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran