ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி திடீர் சந்திப்பு

Sasikala| Last Modified வியாழன், 2 பிப்ரவரி 2017 (10:42 IST)
தனது படங்கள் வெளியாகும் நேரத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திப்பதை ரஜினி வழக்கமாக கொண்டிருக்கிறார்.  சமீபகாலங்களில் அப்படியும் இல்லை. ரஜினி, ரசிகர் சந்திப்பு நடந்து பல வருடங்களாகிறது. இந்நிலையில் மாநில மற்றும்  மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

 
இந்த சந்திப்பு சென்னையில் உள்ள ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்தது. மன்றத்தின் முக்கிய  நிர்வாகிகள் மட்டும் இதில் கலந்து கொண்டனர். அவர்களுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து ரஜினி உரையாடியதாக தெரிகிறது.
 
இந்த வருடம் தீபாவளிக்கு ரஜினியின் 2.0 படம் வெளியாகிறது. தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிக்கும் படத்தில்  ரஜினி நடிக்கிறார்.
 
ரஜினி, ரசிகர் மன்ற நிர்வாகிகளின் சந்திப்பு குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.


இதில் மேலும் படிக்கவும் :