1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 21 ஜூன் 2018 (15:45 IST)

ரஜினி தங்கியதால் விடுதியின் பெயரை மாற்றிய இயக்குனர்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. ரஜினி நடிப்பில் காலா திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், ரஜினியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் கடந்த 4ம் தேதி துவங்கியது. இந்த படப்பில் கலந்து  கொள்வதற்காக ரஜினி கடந்த 7ம் தேதி அங்கு சென்றார்.
இப்படத்தில் அனிருத் இசையமைக்கிறார். திரு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சனத் ரெட்டி ஆகியோர்  முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு டேராடூன் மற்றும் டார்ஜலிங் ஆகிய இடங்களில் ஒரே  ஷெட்யூலாக, மொத்தம் 40 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு டார்ஜிலிங் மற்றும் அதை சுற்றி உள்ள மலை பிரதேசங்களில் நடந்து வருகிறது.
 
இந்த படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் 30 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 10 நாட்களாக குர்சியாங்கில் உள்ள அலிதா என்ற  தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இந்த விடுதியில் உள்ள டைரக்டர்ஸ் பங்களா என்னும் இல்லத்தில் தங்கினார். ரஜினி தங்கியதால் பிரபலமானதை அடுத்து  அதனை நினைவு கூறும் வகையில் அந்த இல்லத்தின் பெயரையே ரஜினிகாந்த் வில்லா #3 என்று மாற்றி இருக்கிறார் விடுதியின் அதிபர்.
 
இது குறித்து விடுதியின் இயக்குனர் மேகுல் பரேக் கூறுகையில் ‘சூப்பர் ஸ்டார் எங்கள் விடுதியில் தங்கியது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம்  என்றும், அவரது நினைவாக ஒரு மரம் நட்டுள்ளோம். இனி அவர் தங்கிய அந்த விடுதி இல்லம் ரஜினிகாந்த் பெயரிலேயே அழைக்கப்படும்’ என்று கூறி இருக்கிறார். மேலும் ரஜினி தங்கி இருந்த நாட்களில்  குடித்த தேநீருக்கு ‘தலைவா ஸ்பெ‌ஷல்’ என்று பெயரிட்டுள்ளனர்.