1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: புதன், 14 மார்ச் 2018 (16:52 IST)

தீபாவளிக்காவது ரிலீஸாகுமா ரஜினியின் ‘2.0’?

ரஜினி நடித்துள்ள ‘2.0’ படம், தீபாவளிக்காவது ரிலீஸாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

 
ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘2.0’. ஏமி ஜாக்சன் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளார். லைகா புரொடக்‌ஷன் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
 
இந்தப் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடியாமல் இழுத்துக்கொண்டே போகிறது. முதலில் கிராபிக்ஸ் பணிகளை ஒப்புக்கொண்ட அமெரிக்க நிறுவனம் திவாலானதால், இந்திய நிறுவனங்களிடம் பணிகள் பிரித்து அளிக்கப்பட்டன. ஆனால், அவற்றின் வேலைகளில் திருப்தி இல்லாததால், மறுபடியும் இன்னொரு அமெரிக்க நிறுவனத்திடம் கொடுத்திருக்கிறார்கள். எனவே, வருகிற தீபாவளிக்காவது ‘2.0’ படம் ரிலீஸாகுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.