புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 14 மார்ச் 2018 (14:36 IST)

அமிதாப் பச்சனுக்கு பிரார்த்தனை செய்யும் சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அமிதாப் பச்சனுக்காக கடவுளிடம் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.

 
 
அமிதாப் பச்சன் நடிக்கும் `தக்ஸ் ஆஃப் ஹந்தோஸ்தான்' திரைப்படத்தின்  படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து வந்தது. இந்த படப்பிடிப்பில் நேற்று  நடிக்க சென்ற அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை பரிசோதிக்க மும்பையில் இருந்து மருத்துவ குழு  ராஜஸ்தானுக்கு வந்தது.
 
இது தொடர்பாக இமயமலைக்கு பயணம் சென்றுள்ள ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசியபோது, என்னுடைய நண்பரும், நடிகருமான அமிதாப் பச்சன் உடல் நலக் குறைவில் இருந்து குணமடைய கடவுளை பிரார்த்திக்கிறேன் என்றார். மேலும், ஆன்மிகம் பயணம் வந்துள்ளதால் அரசியல் குறித்து பேச வேண்டாம் என்று தெரிவித்தார்.