புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 25 ஜனவரி 2019 (08:46 IST)

பேட்ட, விஸ்வாசம் வசூல் ஃபைட்: இட்லி டைலாக்கில் பதில் சொன்ன கார்த்திக் சுப்புராஜ்

பேட்ட, விஸ்வாசம் படத்தின் வசூல் நிலவரம் குறித்த மோதல்களுக்கு பேட்ட படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பதிலளித்துள்ளார்.
 
பேட்ட, விஸ்வாசம் படத்தின் வசூல் நிலவரம் குறித்து இன்னும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் அதற்குள் சமூக வலைத்தள டிராக்கர்கள் இரு படங்களின் வசூல் நிலவரம் குறித்து பொய்யான வதந்திகளை பரப்பி ரசிகர்களிடையே சண்டையை மூட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில் இதுகுறித்து பேசிய பேட்ட படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், ஒரு கடைக்கு இட்லி சாப்பிட போகிறோம் என்றால் அன்று அந்த கடையில் எத்தனை இட்லி விற்கப்பட்டது என்று கேட்டா சாப்பிட செல்கிறோம்? இல்லை. இட்லி நன்றாக இருக்கிறதா இல்லையா என்று மட்டும் தான் பார்ப்பார்கள்.
 
அப்படி படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்று பார்க்கனுமே தவிர, வசூல் நிலவரத்தை வைத்து சண்டை போடுவது முட்டாள் தனம் என அதிரடியாக பேசினார்.