ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 15 அக்டோபர் 2018 (18:13 IST)

ரஜினி கடவுள் மாதிரி: த்ரிஷா புகழாரம்

'பேட்ட' படத்தில் நடித்துவரும் த்ரிஷா, ரஜினி கடவுள் மாதிரி என டுவிட்டரில் புகழ்ந்துள்ளார்.
 
ரஜினியின் 165வது திரைப்படமான 'பேட்ட' படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இப்படத்தில் சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், சசிக்குமார் என பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 
 
படத்தின் படப்பிடிப்பு வட மாநிலங்களில் நடந்து வருகிறது. இப்போது உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோ மற்றும் வாரணாசி பகுதியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது,  தற்போது திரிஷா-ரஜினி இடம்பெறும் காட்சிகள் வாரணாசியில் படமாக்கப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில், படக்குழுவினர் காசி விஸ்வநாதன் கோவிலில் தரிசனம் செய்துள்ளனர். இதில் ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை த்ரிஷா, அவரது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில், கடவுள் போன்ற மனிதருடன் தரிசனம் இனிதே நிறைவுற்றது என்று தெரிவித்துள்ளார்.