வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 6 ஜூன் 2023 (12:54 IST)

ரஜினி – ஞானவேல் படம் தொடங்குவதில் தாமதம்… காரணம் லைகாவா?

லைகா நிறுவனம் அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களின் படத்தை தயாரித்து வருகிறது. இதில் அஜித்தின் விடாமுயற்சி மற்றும் ரஜினி –ஞானவேல் இணையும் என இரண்டு படங்கள் உள்ளன.

இதில் ஞானவேல் இயக்கும் படத்துக்கான அறிவிப்பு எப்போதோ வெளியானாலும், இன்னும் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. இந்த படத்தின் கதைக்களம் பற்றி சமூகவலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதன்படி இந்த படத்தில் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக நடிப்பதாகவும், அவர் சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் என்கவுண்ட்டர்களுக்கு எதிராக போராடும் வேடத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

லைகா நிறுவனத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட ரெய்ட்களால் அந்த நிறுவனம் பொருளாதார சிக்கல்களில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் ரஜினி படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் ரஜினி லைகா, தன் பிரச்சனைகளை முடித்துவிட்டு வரட்டும் என ரிலாக்ஸாக உள்ளதாக சொல்லப்படுகிறது.