1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 1 ஜூன் 2023 (18:22 IST)

’ஜெயிலர்’ படப்பிடிப்பு முடிந்தது: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பிரபல இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தில் ரஜினிகாந்த், தமன்னா, சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படம் ஒரு அதிரடி ஆக்சன் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்து விட்டதாக கூறியுள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் படப்பிடிப்பு முடிவடைந்ததை கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Siva