திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 10 செப்டம்பர் 2021 (18:17 IST)

‘அண்ணாத்த’ படத்தின் மாஸ் மோஷன் போஸ்டர் வீடியோ வைரல்!

‘அண்ணாத்த’ படத்தின் மாஸ் மோஷன் போஸ்டர் வீடியோ வைரல்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியான நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது
 
ரஜினியின் கம்பீரமான நடை, ரஜினிகாந்த் பேசும் மாஸ் வசனம் ஆகியவை இந்த மோஷன் போஸ்டரை வைரலாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மோஷன் போஸ்டரில் உள்ள காட்சிகளை பார்க்கும்போது இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது 
 
‘அண்ணாத்த’ படம் குடும்ப சென்டிமென்ட் கதையாக இருந்தாலும் இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளும் உண்டு என்பது ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல் ஆகும். இந்த நிலையில் ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது