1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 12 டிசம்பர் 2020 (16:21 IST)

போட்டா ரஜினிக்குதான் ஓட்டு – 28 ஆண்டுகளாக வாக்கே அளிக்காத ரசிகர்!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து அவருக்குதான் வாக்கு செலுத்துவேன் என வைராக்யமாக ஒருவர் 28 ஆண்டுகள் வாக்கு செலுத்தாமல் இருந்து வருகிறார்.

ரஜினிகாந்துக்கு தமிழகத்தில் வெறித்தனமாக ரசிகர்கள் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. எந்த அளவுக்கு என்றால் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அலகு குத்தி மண்சோறு சாப்பிடும் அளவுக்கு செல்லும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் நீண்ட காலமாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என சொல்லிக் கொண்டு இருந்த நிலையில் ஒரு ரசிகர் 28 ஆண்டுகளாக ஓட்டு போடாமலே வாழ்ந்து வந்துள்ளார்.

புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்த மகேந்திரன் (46) வாக்களிக்கும் உரிமையை பெற்று 28 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் தீவிர ரஜினி ரசிகரான இவர் வாக்களித்தால் ரஜினிக்குதான் வாக்களிப்பேன் என வைராக்யமாக கடந்த 28 ஆண்டுகளில் நடந்த எந்த தேர்தலிலும் வாக்களிக்காமல் இருந்துள்ளார். இப்போது ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என தெரிவித்திருப்பதால் அடுத்த ஆண்டு தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க உள்ளார்.