அஜித் வாங்குற அதே சம்பளத்துக்கு அடம் பிடிக்கும் ரஜினி..!

Last Updated: திங்கள், 28 ஜனவரி 2019 (10:19 IST)
நடிகர் அஜித் வாங்கும் சம்பத்திற்கு ரஜினி அடம்பிடிக்கிறாராம். இதனால் லைக்கா நிறுவனம் பெரும் குழப்பத்தில் இருக்கிறது. 


 
‘சர்கார்’ திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நடிகர் ரஜினிகாந்தை வைத்து அரசியல் படம் இயக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. இப்படத்தை பற்றி நிறைய தகவல்கள் வந்துகொண்டிருந்தாலும் இதன் தயாரிப்பு நிறுவனமான லைக்கா அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை காரணம் ரஜினியின் சம்பள பிரச்சனை தானாம். 
 
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் 2.0 இப்படத்திற்கு பிறகு ரஜினியின் மார்கெட் கிடு கிடுவென உயர்ந்துவிட்டது. ஆதலால் அந்த படத்திற்கு பிறகு ரஜினி தன் சம்பளத்தை இருமடங்காக உயர்த்திவிட்டாராம். இதனால் முருகதாஸ் தயாரிக்கும் புதுபடத்தில் ரஜினி கேட்கும் சம்பளத்தை தரமுடியாமல் , அதனை மறுக்கவும் முடியாமல் பெரும் குழப்பத்தில் இருக்கிறது லைகா நிறுவனம். 
 
இதற்கான முக்கிய காரணம் என்ன என்று அலசி ஆராய்ந்து பார்க்கும்போது தான் போனி கபூர் தயாரிப்பில் நடித்து வரும் அஜித் 50 கோடி சம்பளம் பேசியுள்ளார். மேலும், அடுத்த படத்திலும் அதே சம்பளத்தில் தான் கபூருடன்  கமிட் ஆகியுள்ளார் அஜித். எனவே அஜித் வாங்கும் அதே சம்பளத்தில் தானும் நடிப்பதா என்ற தயக்கம் தான் ரஜினியை அடுத்த படத்துக்கு நகரவிடாமல் நிறுத்திவைத்திருக்கிறது. என்கிறது சினிமா வட்டாரங்கள். 


இதில் மேலும் படிக்கவும் :