வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 23 மார்ச் 2021 (15:41 IST)

படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பைப் பார்த்து வியந்த ரஜினி… என்ன செய்தார் தெரியுமா?

படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பைப் பார்த்து மிரண்ட ரஜினி அவருக்குப் பேசிய சம்பளத்தை விட இரண்டு மடங்குக் கொடுக்க சொன்னாராம்.

ரஜினியின் சினிமா கேரியரில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் படையப்பா திரைப்படம். அந்த படத்தின் போது ரஜினியின் அரசியல் வருகை குறித்த பேச்சுகள் உச்சத்தில் இருந்த நிலையில் இமாலய வெற்றிபெற்றது. இந்த படத்தில் ரஜினிக்கு பின் அதிக பாராட்டுகளைப் பெற்றவர் ரம்யா கிருஷ்ணன். இந்த கதாபாத்திரத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை வைத்துதான் உருவாக்கினர் என்று சொல்லப்படுவது உண்டு.

இந்நிலையில் இந்த படம் ரிலீஸூக்கு முன்பே வியாபாரத்தில் மிகப்பெரிய லாபம் பார்த்ததால் படத்தில் பணிபுரிந்த ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட நட்சத்திரங்களுக்கு இருமடங்கு சம்பளம் கொடுக்க சொன்னாராம் தயாரிப்பாளரான ரஜினி. இதை எக்ஸியூட்டிவ் தயாரிப்பாளர் பி எல் தேனப்பன் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.