1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வெள்ளி, 9 ஜூலை 2021 (17:56 IST)

ரஜினியின் அடுத்த பட காம்போ கிட்டத்தட்ட இதுதான்!

ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாம்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். 70 வயதாகிவிட்ட அவர் இன்னும் எத்தனை ஆண்டுகள் சினிமாவில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அண்ணாத்த திரைப்படத்தை முடித்துவிட்டு அமெரிக்காவுக்கு சிகிச்சை சென்றுள்ள ரஜினி, இந்தியா திரும்பியதும் தனது அடுத்த படத்துக்கான முடிவை எடுக்க உள்ளார் என சொல்லப்படுகிறது.

அவரின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதில் தேசிங் பெரியசாமி, கார்த்திக் சுப்பராஜ் ஆகியவர்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. ரஜினி அமெரிக்காவுக்கு செல்வதற்கு முன்னர் தேசிங் பெரியசாமியிடம் ஒன்லைன் கதையைக் கேட்டு தம்ஸ் அப் காட்டிவிட்டு முழுக்கதையை தயார் செய்ய சொல்லி சென்றாராம். இந்நிலையில் விரைவில் தேசிங் பெரியசாமிக்கு ரஜினியிடம் இருந்து அழைப்பு வரலாம் என்ற நிலை உள்ளதாம். அவர் கதை சொல்லி ஓகே ஆகிவிட்டால் அடுத்த கட்ட வேலைகள் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம்.