வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 7 ஆகஸ்ட் 2024 (15:18 IST)

சூப்பர் ஸ்டார் படம் என்பதை விட இதுதான் எனக்கு முக்கியமாகப் பட்டது… வேட்டையன் படம் பற்றி மஞ்சு வாரியர் பகிர்ந்த தகவல்!

ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த், இயக்குனர் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் இப்போது நடித்து முடித்துள்ளார். படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தின் ஷூட்டிங்க் முடிந்துள்ள நிலையில் இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் படத்தில் நடித்துள்ள மஞ்சு வாரியர், தான் படத்தில் ரஜினி கதாபாத்திரத்துக்கு மனைவியாக நடித்துள்ளதாக ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

மேலும் படம் பற்றி பேசியுள்ள அவர் “இந்த படத்தில் கமிட்டாகும் போது முதலில் ரஜினி சார் படத்தில் நடிக்கிறேன் என தெரியாது. ஜெய்பீம் என்ற தரமான படம் கொடுத்த இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கப் போவது என் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறேன் என்பதை விடவும் ஞானவேல் படத்தில் நடிக்கிறேன் என்ற பொறுப்புதான் என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது” எனக் கூறியுள்ளார்.