திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : வெள்ளி, 13 மே 2022 (18:13 IST)

’விக்ரம்’ இசை வெளியீட்டு விழா: ரஜினி, விஜய்க்கு அழைப்பா?

vikram audio
’விக்ரம்’ இசை வெளியீட்டு விழா: ரஜினி, விஜய்க்கு அழைப்பா?
கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 15ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது
 
இந்த விழாவை பிரமாண்டமாக நடத்த தமிழ் திரை உலகின் முக்கிய நட்சத்திரங்களை அழைக்க படக்குழு முடிவு செய்துள்ளது
 
அதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இதில் ரஜினி மற்றும் விஜய் ஆகிய இருவரும் இசை வெளியீட்டு விழாவிற்கு வர ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
நீண்ட இடைவெளிக்கு பின்னர் கமல், ரஜினி, விஜய், சூர்யா ஆகிய நான்கு முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கும் விழா நடைபெற இருப்பதால் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது