வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 24 ஏப்ரல் 2019 (11:56 IST)

மகளை பார்க்க கோர்ட்டில் அனுமதி கேட்ட தாடி பாலாஜி! பாவம்யா இந்த மனுஷன்!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் ஒருவரான தாடி பாலாஜி குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் தலைவிரித்தாடுகிறது. தங்கள் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை பாலாஜியும் மனைவி நித்தியாவும் வெளிப்படையாக ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றங்களை சுமத்தி வருகின்றனர்.


 
நடிகர் தாடி பாலாஜி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் நித்யாவை  காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு போர்ஷிகா என்ற 6 வயது பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளது. இதனால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

அந்நிகழ்ச்சியின் மூலம் இவர்கள் இருவரும் ஒன்றிணைத்து விடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால்  வெளியேறியபோதும் பிரச்சனை தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. 
 
இந்நிலையில் தற்போது இவர்களது வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தனது மகள் போஷிகாவை பார்க்க பாலாஜி அனுமதி கேட்டார். பாலாஜியின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி வாரம் ஒரு முறை பாலாஜியின் தாய் வீட்டில் மாலை 3:00 முதல் 4:00 மணி வரை மகளை பார்க்கலாம் என  நீதிமன்றம் அனுமதித்துள்ளது.