ராஜேஷுடன் கைகோர்க்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி !

Last Modified செவ்வாய், 23 ஜூலை 2019 (10:43 IST)
பிரபல இயக்குனர் ராஜேஷ் இயக்கும் புதிய படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகியப் படங்களின் மூலம் நம்பிக்கை அளிக்கும் இயக்குனராக தடம் பதித்தவர். ஆனால் வழக்கமான டாஸ்மாக் காட்சிகள், பெண்களை திட்டும் காட்சிகள் என கிளிஷேக்களில் சிக்கிக் கொண்டதால் அவர் படங்கள் பெரிய வரவேற்பைப் பெற தவறின.

கடைசியாக அவர் இயக்கிய மிஸ்டர் லோக்கல் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வியாபார ரீதியாகவும் படுதோல்வி அடைந்தது. இதனால் உடனடியாக ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்நிலையில் மிஸ்டர் லோக்கல் படத்துக்கு இசையமைத்த ஹிப்ஹாப் ஆதியை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கும் முனைப்பில் இருக்கிறார்.

விரைவில் தொடங்க இருக்கும் இந்தப்படத்தின் மூலம் மீண்டும் ராஜேஷ் தனது வெற்றிப்பாதைக்கு திரும்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :