செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 7 மே 2020 (08:31 IST)

இதற்காக தான் RRR படத்திற்கு ஆலியா பட்டை தேர்ந்தெடுத்தேன் - ராஜமௌலி விளக்கம்!

தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். மேலும் பாலிவுட் நடிகை ஆலியா பட் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கின்றார்.

தெலுங்கு, தமிழ் , இந்தி, கன்னடம் , மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவரும் இப்படத்தை காண உலகம் முழுவதும் உள்ள ராஜமௌலியின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அண்மையில் வெளியான இப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவை தென்னிந்திய சினிமாவே திரும்பி பார்த்தது. நெருப்பு நீர் என வித்யாசமான கான்செப்டில்  வெளியான இப்போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் ராஜமௌலி RRR படத்தில் ஆலியா பட்டை தேர்தெடுத்ததற்கான காரணத்தை கூறியுள்ளார். அதில்,  " இப்படத்தில் இரண்டு பெரிய நடிகர்களுக்கு இடையே போட்டி போட்டு நடிக்க ஒருவர் நடிகை தேவைப்பட்டார். இது முக்கோண காதல் கதை இல்லை. அவரின் கதாபாத்திரம்  மிகவும் அப்பாவியானதாகவும், ஆபத்தானதாகவும் இருக்கும். எனவே அதற்கு பொருத்தமானவர் ஆலியா பட் எனபதால் அவரை தேர்ந்தெடுத்தேன் என்று தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளார்.