செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 6 மே 2019 (20:54 IST)

ஆஸ்திரேலியாவில் பிறந்த நாள் கொண்டாடிய 'சின்னமச்சான்' புகழ் ராஜலட்சுமி

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி ஜோடி சூப்பராக பாடிய நிலையில் செந்தில் கணேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். அதன்பின்னரும் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி ஜோடி கலந்து கொண்டது,. மேலும் செந்தில் கணேஷ் தற்போது ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார்.
 
இந்த நிலையில் ஒரு இசை நிகழ்ச்சிக்காக செந்தில் கணேஷ், ராஜலட்சுமி ஜோடி ஆஸ்திரேலியா சென்றிருந்தனர். அங்கு ராஜலட்சுமி தனது பிறந்த நாளை கணவர் மற்றும் இசைக்குழுவினர் முன் கேக் வெட்டி கொண்டாடினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 
தமிழ் கிராமிய இசையை உலகம் முழுவதும் பரப்பி வரும் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி ஜோடிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருவதோடு, ராஜலட்சுமிக்கு நெட்டிசன்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.