உங்களுக்கு சூப்பரா செட் ஆகுது கார்ட்டூன் இமேஜில் கலக்கும் ரைசா!
நடிகை ரைசா வில்சன் வெளியிட்ட லேட்டஸ்ட் கார்ட்டூன் எபெக்ட் போட்டோஸ்!
மாடல் அழகியாக பெங்களூரில் வேலை பார்த்து வந்தவர் ரைசா வில்சன். அதன் பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் பிரபலமானார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக பட வாய்ப்புகளும் மல மலவென குவியத்தொடங்கியது. பியார் பிரேமா காதல் படம் மெகா ஹிட் அடிக்க மார்க்கெட் பிடித்து உட்கார்ந்துவிட்டார்.
தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் வித விதமான போட்டோக்களை வெளியிடும் அவர் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வரும் கார்ட்டூன் எபெக்ட் போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.