ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 19 டிசம்பர் 2020 (20:38 IST)

காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் தலைவராகிரார் ராகுல்காந்தி ?

வரும் ஜனவரி மாதம் ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவராகப் மீண்டும் பொறுப்பேற்பார் என கட்சித் தொண்டர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 54 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜகவிடம் படு்தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் யாருமே தேர்தலில் கட்சித் தோல்விக்குப் பொறுப்பேற்காத  நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் தன் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடித்தார். இதற்கு 5 மாநில முதல்வர்கள் நேரில் சென்று ராகுலை சமாதானப்படுத்த முயன்றனர். பலவேறு மாவட்டங்களில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

ஆனால் எதற்கும் ராகுல் உடன்படவில்லை என்று தெரிகிறது. நேரு குடும்பத்தைச் சாராத ஒர்வரே காங்கிரஸ் தலைவராக பொறுபேற்க வேண்டும் என்று பிடிவாதமாகக் கூறினார்.

ஆனால் இதை ஏற்காத காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல்காந்தியே காங்., தலைவராகத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தினர்.இதை ஏற்காத ராகுல்காந்தி தன் முடிவில் உறுதியாக இருந்தார்.

பின்னர், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஒன்றுகூடி, சோனியா காந்தியை தலைவராக  தொடருமாறு கூறினர். ஆனால் அவர் தற்காலிகத் தலைவராக இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், சோனியாவுக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு  அவர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

எனவே, காங்கிரஸ் கட்சியின் நலத்தைக் கருத்தில்கொண்டு ராகுல்காந்தி மீண்டும்  அக்கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்க  முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

அநேகமாக வரும் ஜனவரி மாதம் ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவராகப் மீண்டும் பொறுப்பேற்பார் என கட்சித் தொண்டர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.