ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (14:24 IST)

ரஹ்மானுடன் உரையாட ரசிகர்களுக்கு ஒரு வாய்ப்பு!

ரஹ்மான் கதை எழுதி இசையமைத்து தயாரித்துள்ள திரைப்படம் 99 சாங்ஸ் விரைவில் ரிலிஸாக உள்ளது.

ஏ ஆர் ரஹ்மான் கதை, திரைக்கதை எழுதி இசையமைத்துள்ள திரைப்படம் 99 சாங்ஸ். விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரித்துள்ளார் ரஹ்மான். ஏஹான் பட் மற்றும், எடில்சி வர்கஸ் ஆகியோர் இந்த படத்தில் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர்.14 பாடல்கள் கொண்ட இந்த படத்தின் இசை சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட உள்ளது.  அதே போல படம் இந்த மாதத்தில் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் படத்தை ப்ரமோட் செய்யும் விதமாக ரஹ்மான் ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு உருவாகியுள்ளது. 99 சாங்ஸ் படத்தில் தங்களுக்கு பிடித்த பாடலைப் பாடி வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில்  #99SongsCoverStar என்ற ஹேஷ்டேக்கோடு வெளியிடவேண்டும். அதில் நன்றாக பாடும் 10 ரசிகர்களை ரஹ்மான் சந்தித்து உரையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.