1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (15:41 IST)

ஹீரோவாக நடிப்பது பற்றி ரஹ்மானின் பதில்!

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானிடம் ரசிகர் ஒருவர் கதாநாயகனாக நடிப்பது பற்றி பதிலளித்துள்ளார்.

இந்திய சினிமாவின் அடையாளமாக உலக சினிமா அரங்கில் மதிக்கப்படுபவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான். ஆஸ்கர் மற்றும் கோல்டன் க்ளோப் உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற அவர் இப்போது இந்திய சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டு இருந்த ஒரு வீடியோவில் கமெண்ட் செய்த ரசிகர் ஒருவர் ‘நீங்கள் எப்போது கதாநாயகனாக நடிக்கப் போகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு ரஹ்மான் ‘நான் அமைதியாக முதுமை காலத்தில் வாழ்வதை விரும்பவில்லையா?’ எனக் கேட்டுள்ளார்.