1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : திங்கள், 28 செப்டம்பர் 2020 (18:18 IST)

ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணியின் ஜாமீன் மனுக்கள் நிராகரிப்பு

ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணியின் ஜாமீன் மனுக்கள் நிராகரிப்பு
போதைப்பொருள் விவகாரம் கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்யாணி ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
இந்த நிலையில் ஏற்கனவே ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் தனித்தனியாக ஜாமின் மனுக்களை தாக்கல் செய்தனர் என்பதும் அந்த மனுக்கள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன என்றும் செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் தற்போது போதைப்பொருள் விவகாரத்தில் கைதான நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஜாமீன் மனுக்கள் மீண்டும் நிராகரிக்கப்பட்டு உள்ளன. இதனை அடுத்து அவர்கள் சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை உள்ளது 
 
போதைப்பொருள் விவகாரத்தில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர்கள் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் வலுவாக இருப்பதால் அவர்களுடைய ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது