வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papikhsa
Last Modified: புதன், 25 மார்ச் 2020 (18:49 IST)

பெத்தவங்கள சாவடிக்காதடா.... லாரன்ஸ் வெளியிட்ட புதிய விழிப்புணர்வு வீடியோ!

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் நோய் தொற்று உலக நாடுகளில் பரவி பெருவாரியான மக்கள் இனத்தை அழித்து வருகிறது. இதனால் அந்தந்த நாட்டு மக்கள் அனைவரும் இந்த நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள விழிப்புணர்வுடன் இருந்து வருகின்றனர்.

மேலும் சிலர் கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சச்சின் டெண்டுல்கர், தீபிகா படுகோனே, அனுஷ்கா சர்மா, விராட் கோலி, அமிதாப் பச்சன் , ரஜினிகாந்த் , தனுஷ், மாதவன், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலரும் விழிப்புணர் வீடியோக்களை வெளியிட்டனர். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கை இல்லாத மாற்று திறனாளி ஒருவருடன் கொரோனா வைரஸ் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டு விழிப்புணர்வு கருத்தை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் " 20 நாட்கள் லீவு கிடைத்ததால் அப்பா , அம்மா பார்க்க ஊருக்கு கிளம்பும் ஒருவரை அழைத்து அட்வைஸ் கொடுக்கிறார். அவர் பேசியுள்ள முழு வீடியோ இதோ...