1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 21 மார்ச் 2020 (10:37 IST)

இந்தியாவின் 3 ஆம் கட்டத்தில் கொரோனா தொற்று?

கொரோனா நான்கு கட்டங்களாக பரவுவதாகவும், இந்தியா அதில் 3 ஆம் கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும்  நிலையில் இதில் இந்தியா ஒன்றும் விதி விளக்கல்ல. ஆம், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 236 ஆக உயர்ந்துள்ளது, 5 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 56 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கேராளாவிலும் நோய் தொற்று அதிகரித்த வண்ணமே உள்ளதாக தெரிகிறது. 
 
இந்நிலையில் கொரோனா நான்கு கட்டங்களாக பரவுவதாகவும் இந்தியா அதில் 3 ஆம் கட்டத்தில் இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. நான்காம் கட்டத்தை நெருங்கும் நிலை மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்படுகிறது. 
கொரோனாவின் நான்கு கட்டங்கள்: 
 
1. இறக்குமதி பரவல்: 
கொரோனா பாதித்த வெளிநாடுகளில் இருந்து இங்கு வருவோருக்கு கொரோனோ வைரஸ் தொற்று கண்டறியப்படுவது. 
 
2. உள்நாட்டு பரவல்: 
வெளியில் இருந்து வந்த நபர்களின் மூலமாக உள்நாட்டில் நோய் பரவுவது.  
 
3. சமூக பரவல்: 
உள்நாட்டிற்குள் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவுவது. 
 
4. தொற்றுநோய் பரவல்: 
எங்கு யார் மூலமாகப் பரவியது என அறிய முடியாத அளவிற்கு உள்நாட்டிற்குள் தீவிரமாகப் பரவுவது.