வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 13 டிசம்பர் 2019 (22:24 IST)

கமல் படத்தில் நடிக்க மறுத்தது உண்மைதான்: ராகவா லாரன்ஸ்

சமீபத்தில் நடைபெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’தர்பார்’ திரைப்படத்தின் ஆடியோ விழாவில் கமல் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்த ராகவா லாரன்ஸ், கமல் படத்தில் நடிக்க மறுத்தது உண்மைதான் என கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
ராகவா லாரன்ஸ் தற்போது பாலிவுட்டில் அக்ஷய் குமார் நடித்து வரும் காஞ்சனா படத்தின் ரீமேக் படத்தை இயக்கி வருகிறார். ‘லட்சுமி பாம்’ என்ற டைட்டில் கொண்ட இந்த படத்தை இயக்கி முடித்ததும் அவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள கால பைரவர் என்ற படத்தை நடித்து இயக்கவுள்ளார். இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் கமல் தற்போது நடித்து வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பை முடித்த உடன் ’தலைவன் இருக்கிறான்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் ஏற்கனவே வடிவேலு நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ராகவா லாரன்ஸ் இடமும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க படக்குழுவினர் அணுகினர் 
 
ஆனால் ’காஞ்சனா’ இந்தி ரீமேக் மற்றும் ’காலபைரவா’’ ஆகிய படங்களில் தான் பிஸியாக இருப்பதால் ’தலைவன் இருக்கின்றான்’ படத்தில் தன்னால் நடிக்க முடியாது என ராகவா லாரன்ஸ் மறுத்து விட்டாரம். இருப்பினும் கமல் படத்தில் அடுத்தடுத்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது