1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 16 ஏப்ரல் 2020 (12:22 IST)

மீண்டும் ரூ.15 லட்சம் நிதியுதவி செய்த ராகவா லாரன்ஸ்: இம்முறை யாருக்கு?

மீண்டும் ரூ.15 லட்சம் நிதியுதவி செய்த ராகவா லாரன்ஸ்
நடிகரும் நடன இயக்குனரும் பிரபல இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சமீபத்தில் கொரோனா தடுப்பு நிதியாக ரூ 3 கோடி அளிக்க போவதாக அறிவித்திருந்தார் என்பதும் இந்த ரூ. கோடியில் 50 லட்சம் மத்திய அரசு நிவாரண பணிக்கும், 50 லட்சம் மாநில அரசு நிவாரண பணிக்கும், 50 லட்சம் பெப்சி அமைப்புக்கும், 50 லட்சம் நடன இயக்குனர் அமைப்புக்கும், 25 லட்சம் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும், 75 இலட்சம் ராயபுரம் பகுதி தினக்கூலி மக்களுக்கும் அளிக்கவிருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இருப்பினும் நேற்று தமிழக அரசு நிவாரண உதவி அளித்தவர்களின் பட்டியலில் ராகவா லாரன்ஸ் பெயர் இல்லை என்ற சர்ச்சையும் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்த ரூ.3 கோடி தவிர தூய்மைப் பணியாளருக்கு ரூபாய் 25 லட்சம் ராகவா லாரன்ஸ் நிதியுதவி அளித்தார் என்பதும் இந்த பணம் தான் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன் மூலம் இந்த பணம் தூய்மைப்பணியாளர்களின் வங்கி கணக்கிற்கு செல்லவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது ராகவா லாரன்ஸ் மேலும் 15 லட்சம் ரூபாய் நிதியை சென்னை செங்கல்பட்டு மாவட்டம் விநியோகிஸ்தர் சங்கத்தினர்களுக்காக அளித்து உள்ளார். இந்த பணத்தை அவர் சென்னை-செங்கல்பட்டு விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவர் டி ராஜேந்தர் அவர்களிடம் அளித்துள்ளதாக புகைப்படத்துடன் கூடிய செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த தகவலை சென்னை-செங்கல்பட்டு விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவர் டி ராஜேந்தர் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது