திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (18:30 IST)

விராத் கோஹ்லியுடன் செல்பி எடுத்த நடிகை ராதிகா.. க்யூட் புகைப்படம் வைரல்..!

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, சென்னையில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்வதற்காக விமானத்தில் வந்த நிலையில் அதே விமானத்தில் வந்த நடிகை ராதிகா அவருடன் செல்பி புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான விராத் கோஹ்லி, சென்னையில் நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட இன்று வருகை தந்தார், அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை அடுத்து விரைவில் அவர் பயிற்சியில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சென்னைக்கு விமானத்தில் அவர் வந்து கொண்டிருந்தபோது அதே விமானத்தில் வந்த நடிகை ராதிகா அவரிடம் சில நிமிடங்கள் பேசி செல்பி எடுத்துக் கொண்டதாகவும் மில்லியன் கணக்கானோர் இதயத்தை வென்ற வீரர் ஒருவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டது தனது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ராதிகா தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் கல் குவிந்து வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva