திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 25 நவம்பர் 2021 (11:17 IST)

சிம்புவை வைத்து படம் தயாரிக்க ஆசைப்பட்ட சரத்குமார்… குறுக்கே புகுந்து குட்டையை குழப்பிய உஷா ராஜேந்தர்!

நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் இன்று வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

சிம்பு மீது கடந்த காலங்களில் இருந்த நெகட்டிவ் இமேஜ் மறைய ஆரம்பித்து இப்போது வரிசையாக படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ராதிகா தங்கள் நிறுவனத்துக்கு சிம்பு ஒரு படம் நடிக்கவேண்டும் எனக் கேட்டு சிம்புவை அணுகியுள்ளார். அவரும் சம்மதம் தெரிவித்து சம்பளம் உள்ளிட்ட விஷயங்களை தன்னுடைய தாயாரிடம் பேசிக்கொள்ளும் படி சொல்லிவிட்டாராம்.

இந்நிலையில் ராதிகா சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தரிடம் சம்பளம் பற்றி பேசியுள்ளார். அதற்கு அவர் சிம்பு இப்போது வாங்கும் சம்பளத்தைவிட இரண்டு மடங்கு தொகையை சொல்லி அதில் பேரம் என்பதே இல்லை என்று சொல்லிவிட்டாராம். இதனால் அதிர்ச்சியான ராதிகா சரத்குமார் தம்பதிகள் சிம்புவை வைத்து படம் தயாரிக்கும் ஆசையை அப்படியே கிடப்பில் போட்டு விட்டார்களாம்.