செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 24 ஜூன் 2020 (08:02 IST)

தூக்கத்தில் நடப்பவர்களை பற்றிய குறும்படம் -ராதிகா ஆப்தேவுக்கு கிடைத்த சர்வதேச விருது!

நடிகை ராதிகா ஆப்தே இயக்கிய தெ ஸ்லிப்வாக்கர்ஸ் என்ற குறும்படத்துக்கு சர்வதேச திரைப்பட விருது விழா ஒன்று கிடைத்துள்ளது.

தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் பல மொழிகளில் நடித்து வருபவர் ராதிகா ஆப்தே. இவர் நடித்த பல படங்கள் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன. தற்போது இணையத்தொடர்களில் அதிகமாக நடித்துவரும் அவர், தற்போது இயக்கத்திலும் கால்பதித்துள்ளார். அவர் முதன் முதலாக இயக்கிட தி ஸ்லிப்வாக்கர்ஸ் என்ற திரைப்படம் தூக்கத்தில் நடப்பவர்களைப் பற்றியது.

கொரோனா லாக்டவுன் காரணமாக இணையத்திலேயே நடக்கும் குறும்பட விழாக்களுக்கு இந்த படத்தை அவர் அனுப்பியுள்ளார். அதில் பாம்ஸ் ஸ்ப்ரிங் இண்டர்நேஷனல் ஷார்ட் ஃபெஸ்ட் என்ற குறும்பட விழாவில் அவரது படத்துக்கு சிறந்தபடம் என்ற விருது கிடைத்துள்ளது. இதை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.