புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 21 ஜூன் 2020 (17:57 IST)

ஆமாம்… எங்க அப்பாவாலதான் நான் இங்கு இருக்கேன் – பாலிவுட் நடிகை ஒபன் டாக்!

பாலிவுட்டில் கடந்த ஒரு வாரமாகப் பேசப்பட்டு வரும் வாரிசு அரசியல் பற்றி சோனம் கபூர் பேசியுள்ளார்.

பிரபல பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்(34) சில தினங்களுக்கு அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டது இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி  வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவர் 6 மாதங்களுக்கு மேலாக மன அழுத்தத்தில் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலிவுட்டில் நிலவும் வாரிசுகளின் ஆதிக்கமே சுஷாந்தின் தற்கொலைக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் நட்சத்திரங்களின் வாரிசு ஆதிக்கம் பற்றி பலரும் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் அனில் கபூரின் மகளும் பிரபல நடிகையுமான சோனம் கபூர் இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு நெபோட்டிசம் பற்றி கருத்தை தெரிவித்துள்ளார். அதில் ‘இன்று தந்தையர் தினம். நான் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். ஆமாம் நான் என் தந்தையின் மகள். அவரால்தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன். அதை பெருமையாக நான் உணர்கிறேன். என்னுடைய தந்தை எனக்கு இதெல்லாம் கிடைக்க கடுமையாக உழைத்து இருக்கிறார். நான் எங்கு பிறக்கவேண்டும், யாருக்கு பிறக்கவேண்டும் என்பதெல்லாம் என் கர்மா.’ எனத் தெரிவித்துள்ளார்.