அந்த ஆளே பண்ணியிருக்கார் நமக்கு என்னன்னு நினைச்சேன்!.. எம்.ஜி.ஆர் குறித்து ராதா ரவி கொடுத்த ஓப்பன் டாக்!.
சினிமாவில் வில்லன் நடிகராக நடித்து பல வருடங்களாக தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்திருந்தவர் ராதாரவி. 90களில் பொதுவாக வில்லன் என்றாலே பார்ப்பவர்களை பயமுறுத்தும் வில்லன்களாகதான் இருப்பார்கள். ஆனால் ராதா ரவி வில்லனாக நடித்தப்போது வில்லத்தனம் செய்யும் அதே சமயம் அவர் காமெடியும் செய்வதை பார்க்க முடியும்.
சினிமாவில் பல துறைகளில் முக்கிய பங்காற்றியுள்ளார் ராதா ரவி. அதனால் சில பிரச்சனைகளையும் சந்தித்துள்ளார். சமீபத்தில் கூட டப்பிங் யூனியன் குழுவை சேர்ந்தவர்கள் ராதாரவி குறித்து குற்றச்சாட்டு அளித்து வந்தனர். ஏனெனில் சினிமாவில் பல துறைகளில் முக்கிய பதவிகளில் ராதா ரவி இருந்துள்ளார்.
நடிகர் சங்க தலைவராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் ஒரு பேட்டியில் அவரிடம் சினிமாவில் உள்ள பல துறைகளில் முக்கியமான பதவிகளில் இருந்த அனுபவம் எப்படி இருந்தது என கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த ராதா ரவி கூறும்போது அந்த விஷயத்தில் என்னுடைய ரோல்மாடல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்தான்.
அவர் எந்தெந்த பதவிகளில் எல்லாம் சினிமா துறையில் இருந்தார் என பார்த்தால் தலைவர், செயலாளர், பொருளாளர், வாட்ச்மேன் என எல்லா பதவிகளிலும் இருந்துள்ளார். அட போடா அந்தாளே பண்ணியிருக்காரு நமக்கென்னடா இருக்குன்னு நானும் பண்ணுனேன் என கூறியுள்ளார் ராதா ரவி.
மேலும் அவர் கூறும்போது நடிகர் விஜயகாந்தையும் நான்தான் தலைவர் ஆக்கினேன். ஆனால் அவன் ஒரு தடவை தலைவரா இருந்தான். பிறகு கட்சி துவங்கிவிட்டு தலைவர் பதவியில் இருந்து விலகிவிட்டான். அதன் பிறகுதான் சரத்குமாரை இந்த பதவிக்கு அழைத்தேன் என கூறுகிறார் ராதா ரவி.