1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Raj Kumar
Last Updated : திங்கள், 20 மே 2024 (09:35 IST)

விஜய்யுடன் கடைசியாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா?

thalapathy 69
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தது முதலே அவரது ஒவ்வொரு திரைப்படம் குறித்தும் மக்கள் மத்தியில் வரவேற்பு என்பது அதிகரித்துக்கொண்டே வருகிறது. 2026 தேர்தலுக்கு பிறகு விஜய் சினிமாவில் நடிக்க மாட்டார் என பரவலாக இருக்கும் பேச்சுக்களே இதற்கு காரணமாக இருந்து வருகிறது.லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தில் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பிரபுதேவா, பிரசாந்த்,லைலா, அஜ்மல் போன்ற முக்கிய நடிகர் நடிகைகள் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர். இயக்குனர் வெங்கட் பிரபு இந்த படத்தை இயக்கி வருகிறார்.

வெங்கட் பிரபு திரைப்படம் என்றாலே கொஞ்சம் ஜாலியான திரைப்படமாகதான் இருக்கும். இந்த திரைப்படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. பொதுவாக விஜய் ஒரு படத்தில் நடித்து கொண்டிருக்கும்போதே அடுத்த திரைப்படத்தின் அப்டேட் வெளியாகிவிடும்.

Aparna-Balamuralis


ஆனால் இன்னமும் விஜய்யின் 69 ஆவது திரைப்படம் குறித்து பெரிதாக அப்டேட் எதுவும் வராமலே இருக்கிறது. இந்த திரைப்படம்தான் விஜய்யின் இறுதி திரைப்படம் என கூறப்படுவதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படமாக தளபதி 69 இருந்து வருகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்குகிறார் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடிப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. இவர் ஏற்கனவே தமிழில் சூரரை போற்று, வீட்ல விஷேசம் மாதிரியான படங்களில் நடித்துள்ளார். விரைவில் இதுக்குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.