சனி, 28 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 14 ஜூன் 2016 (12:21 IST)

ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி

ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி

ராதாமோகன் இயக்கிய பல படங்கள் சென்சேஷனல் ஹிட். ஆனால், அவரது மெலோ ட்ராமா மக்களுக்கு ஏனோ பிடிக்காமல் போய்விட்டது.


 


கௌரவம் படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கிய உப்பு கருவாடும் சுமாராகவே போனது. இந்நிலையில், புதிய படத்துக்கான வேலைகளை ராதாமோகன் தொடங்கியுள்ளார்.
 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் அருள்நிதி நாயகனாக நடிக்கிறார். முக்கியமான வேடத்தில் விவேக். வான்சன் மூவிஸ் படத்தை தயாரிக்க, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு.
 
மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.