வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (19:41 IST)

குளியல் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த ராய் லட்சுமி !

இந்தி சினிமாவிற்கு சென்றால் எல்லாம் ஓபன் தான் என்பது தென்னிந்திய சினிமா நடிகைகள் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ராய் லட்சுமி பாலிவுட் பக்கம் தாவியதும்  கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வருகிறார். 


 
தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி.  அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.
 
பிறகு அம்மணிக்கு  அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது.  இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து சவுகார்பேட்டை திரைப்படத்தில் நடித்தார் ஆனால் அந்த படமும் சரியாக ஓடாததால் உடல் எடையை குறைத்து பாலிவுட் பக்கம் தாவிய  ராய் லட்சுமி. கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வருகிறார்.  
 
அந்த வகையில் தற்போது மீண்டும் நடிகை ராய் லட்சுமி நீச்சல் குளத்தில் சிவப்பு நிற பிகினி உடை அணிந்துகொண்டு ஹாட் போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளார். சமூகவலைத்தளங்களில் இந்த புகைப்படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.